August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,26/08/2026.

சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் அறிவிப்புக்கு எதிராக போராட்டம்.

கடந்த திமுக ஆட்சியில் மகளிர் விடியல் பயணம் என்ற பெயரில் மாநகர பேருந்துகளில் செல்லும் மகளிருக்கு இலவசமாக பயணிக்கலாம் என மகளிர் விடியல் பயணம் திட்டம் இருந்தது.

அந்த வகையில் மாநகர பகுதிகளில் மட்டும் மகளிளில் இலவசமாக பயணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், நேற்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் புறநகர் பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டம் அக்டோபர் 2-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவித்தார்.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் இருந்து அத்தூர், தம்மம்பட்டி , அரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 300 பேருந்துகள் சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்தை அமல்படுத்தினார் தங்களுடைய வாழ்வாதாராம் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும். அல்லது தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மானியம் தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.