சேலத்தில் மொபைல் கடை உரிமையாளர் டூ போக்குவரத்துத்துறை அமைச்சர் – யார் இந்த விஜய் தமிழன் பார்த்திபன்?
சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக களமிறங்கிய விஜய் தமிழன் பார்த்திபன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.
விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.
அமைச்சர் தமிழன் பார்த்திபன்
யார் இந்த விஜய் தமிழன் பார்த்திபன்?
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் தமிழின் பார்த்திபன். 12 – ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், சேலத்தில் சாதாரணமாக செல்போன் கடை ஒன்றை தொடங்கி நடத்த ஆரம்பித்திருக்கிறார். விஜயின் தீவிர ரசிகரான இவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயுடன் பயணித்து வருகிறார்.
சேலம் மாவட்டத்தில் விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகியாக நீண்ட காலம் செயல்பட்டு வந்த இவர், த.வெ.க – வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். விஜய் மீதான நட்பால் ஆரம்பகாலத்தில் விஜய் நடித்த திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றிருக்கிறார் இந்த தமிழன் பார்த்திபன்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!