June 17, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,17/06/2026.

சேலம் பேருந்து நிலையம் அருகே போதை வாலிபரிடம் சிக்கி தவித்த சிங்கப்பெண் சிறப்பு படையினர்.

சேலம் பேருந்து நிலையம் அருகில் போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை அடக்க முடியாமல் சிங்கப்பெண் சிறப்பு படையினர் தவித்தனர்.

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே அண்ணாநகரில் ரேஷன் கடை உள்ளது.ரேஷன் கடை வாசலில் போதை வாலிபர் ஒருவர் படுத்திருந்தார். திடீரென அந்த போதை வாலிபர் எழுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அந்த வழியாக சென்ற சேலம் மாநகர சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார், அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த வாலிபர் போதை தலைக்கேறிய நிலையில் நீங்க என்ன சிங்கப்பெண் சிறப்பு படையா? என்று தாறுமாறாக பேசினார். இதனையடுத்து சிங்கப்பெண் போலீசார் அந்த வாலிபரின் முகத்தில் தண்ணீரை அடித்து போதையை தெளிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. உடனே அருகில் இருந்தவர்கள், போதை வாலிபரிடம் சென்று சட்டை போட வைத்து சமாதானம் செய்தனர். பின்னர், அங்கு வந்த டவுன் போலீசார் போதை வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதை வாலிபரை அடக்க முடியாமல் சிங்கப்பெண் சிறப்பு படை போலீசார் தவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.