விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா மலையரசன் குப்பத்தைச் சேர்ந்த பொன்னுசாமி கார்த்திக் என்பவர் சென்னையில் செயல் அறக்கட்டளை மற்றும் நம்ம ஃபேமிலி குரூப் என்ற அமைப்பின் மூலம் நோ பசி நோ அனாதை என்று குறிக்கோளுடன் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகள் செய்து வரும் நிலையில்
நேற்று இரவு பொன்னுசாமி கார்த்திக் பிறந்த நாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது .
இதில்
பிறந்தநாளை முன்னிட்டு கணக்கன் குப்பம் நிதி உதவி பெறும் பள்ளியில் பொன்னுசாமி கார்த்திக் தலைமையில் சுற்று வட்டார பகுதியில் பெற்றோர் இல்லாத 150 மாணவர்களுக்கு பள்ளி கட்டணம் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது செலுத்தப்பட்டது.
தொடர்ந்து
ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுதல் விவசாயிகளுக்கு 200 மூட்டை விதை நெல் ,200 யூரியா மூட்டை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது .
தேவதானம் பேட்டை வள்ளலார் மடத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
செஞ்சி தாலுக்கா ஆலம்பூண்டி பேருந்து நிலையம் அருகில் 200 நபர்களுக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
சத்தியமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் கலந்து கொண்டு தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
2000 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேட்டி சேலை வழங்கினர்.
நிகழ்ச்சியில் செயல் அறக்கட்டளை நிர்வாகிகள் நம்ம ஃபேமிலி குரூப் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.