June 19, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,11/06/2026.

சேலம் கோட்ட அதிகாரிகளின் அவசர விளக்கம் – பவானி பைபாஸ் டூ துபாய்க்கு பஸ் – கட்டணம் ரூ.10,000.

பவானி பைபாஸ்ல இருந்து நேரா துபாய்க்கு பஸ்ஸா?கட்டணம் ரூ.10,000 மட்டும்தான்.சோசியல் மீடியாவைக் கலக்கும் வினோத டிக்கெட்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்திற்குட்பட்ட ஓசூர் புறநகர் பணிமனையில் வழங்கப்பட்ட பேருந்து டிக்கெட் ஒன்று,தற்பொழுது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு தீயாய் பரவி வருகிறது.

அந்த மஃபுசில் டீலக்ஸ் (Moffussil Deluxe) பேருந்து டிக்கெட்டில், “பவானி பைபாஸ் → துபாய்” என்று அச்சிடப்பட்டிருந்ததுடன், அதற்கான பயணக் கட்டணமாகப் பிரம்மாண்டமாக ₹10,000 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டிலிருந்து ஆட்டோமேட்டிக்காக துபாய்க்குப் பேருந்து ரூட் போடப்பட்ட இந்த வினோத டிக்கெட்டைப் பார்த்த பயணிகள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

​இந்த விநோத பேருந்து டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். டிக்கெட் அச்சிடும் இயந்திரத்தில் (Ticket Vending Machine) ஏற்பட்ட திடீர் மென்பொருள் பிழை (Software Glitch) காரணமாகவே இப்படித் தவறாக அச்சிடப்பட்டுள்ளது என்றும், அரசுப் பேருந்துக்கும் துபாய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் சேலம் கோட்ட அதிகாரிகள் அவசர அவசரமாகத் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறால் நடந்த இந்தச் சுவாரசியச் சம்பவம் தற்பொழுது இணையத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.