சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவு நீர் இருப்பு எவ்வளவுதான் இருக்கு? விவசாயிகள் கவலை..
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட வேண்டும். அணையின் நீர் இருப்பு ,அணைக்கான நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பு முன்கூட்டியே அல்லது காலதாமதமாகவோ திறக்கப்படுவது வழக்கம்.
நடப்பாண்டு உரிய தேதியான ஜூன் 12 அன்று, மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், நீர் வரத்தும் இல்லாததால் திறக்கப்படவில்லை. அன்னையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேலும் அணைக்கு நீர் வரத்து திருப்திகரமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி அணையின் நீர்மட்டம் 79.50 அடியாக மட்டுமே இருந்தது.
மேட்டூர் அணையின் நீர் நிலவரம்
மேட்டூர் அணையில் இருந்து தற்போது குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 முதல் 1,003 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நீரின் அளவு திருச்சி மாவட்டம் முக்கொம்புவில் 90 முதல் 100 கனஅடி அளவாக மட்டுமே வந்து சேருகிறது.
ஏற்கெனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வறண்டு காணப்படும் நிலையில், போதிய மழையும் பெய்யவில்லை.
மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக குறைந்து வருகிறது.
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி காவிரி நீரை திறக்க வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.
தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.82 அடியாக உள்ளது.
அணையில் உள்ள நீரின் மொத்த இருப்பு 36.07 டிஎம்சியாக உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை இல்லாததால், அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 54 கனஅடியாக குறைந்துள்ளது.
குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,003 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
டெல்டா பாசனத்திற்கு தற்போதும் திறக்க முடியாத நிலை
இதனால் அணையில் இருந்து காவிரியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடியும் கால்வாயில் 500 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியும் நடப்பாண்டு டெல்டா பாசனத்திற்கு தற்போதும் திறக்க முடியாத நிலையே உள்ளது.தற்போது அணையில் இருக்கும் தண்ணீரின் அளவை பொருத்தவரை, டெல்டா பாசனத்திற்கு உடனடியாக திறக்கப்பட்டாலும் அது கடைமடை வரை சென்றடையாது என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக ஆடி மாதத்திற்குள் பருவமழை பெய்தால் தான் உண்டு இல்லாவிட்டால் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவு என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டாத காரணத்தினால் நேற்று சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளதாகவும் உபரி நீரை கொண்டு ஏரிகளை நிரப்பும் திட்டமும் செயல்படாமல் சேலம் மாவட்ட விவசாயிகளும் மிக பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.
விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை
எனவே மேட்டூர் அணையிலிருந்து நடப்பாண்டு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்படலாம் என்றும்கூறப்படுகின்றது. தற்போது உள்ள சூழலில் கடந்த இரண்டு மாதங்களாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரில் குறிப்பிட்ட சதவீத தண்ணீர் ஏதாவது தமிழக அரசு கேட்டு பெற வேண்டும் என்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More Stories
ஜோய்ஆலுக்காஸ் வழங்கும்‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’புதுச்சேரி ஷோரூமில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 16 வரை
திருவரங்கத்தில் இன்று பரபரப்பு சம்பவம்
NEET-ல் 16 மருத்துவ இடங்கள்… NIT-களில் 20-க்கும் மேற்பட்ட சேர்க்கைகள்; புதுச்சேரியில் வேதாந்து ஆச்சாரியாவின் சாதனை