சேலம்:கோவை-சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், வீரபாண்டி-சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த மாதம் 28- ஆம் தேதி வந்தபோது, ரயில் மீது கற்கள் வந்து விழுந்தது.
இதில், சி-1 பெட்டியின் வலதுபுற அவசர கால சைடு கண்ணாடி பலத்த சேதமடைந்தது. இதுபற்றி சேலம் ஆர்பிஎப் போலீசார் ரயில்வே பாதுகாப்பு சட்டம் 153ன் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கல் எறிந்தது அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் எனத்தெரியவந்தது. சம்பவத்தில் தொடர்புடைய 9, 10, 11ம் வகுப்பு படிக்கும் 13 முதல் 16 வயதுடைய 8 சிறுவர்களை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் பிணையில் விடுவித்தனர்.

More Stories
குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு கூட்டம்!!
உதவித்தொகை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
“விக்சித் பாரத் மற்றும் சிறந்த புதுச்சேரி உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் இளைஞர் தலைவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.