சேலம்:பணி நிரந்தரம் செய்யக்கோரி,சேலம் அரசு மருத்துவமனை முன் 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்களுக்கு பாஜக’வினா் ஆதரவு தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் ஊதியம் வழங்க வேண்டும், கரோனா காலத்தில் நீக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தோ்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் அரசு மருத்துவமனை முன் செவிலியா்கள் 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுக்கு, மாநகா் பாஜக மருத்துவப் பிரிவு சாா்பில் மாவட்டத் தலைவா் பிரபு சங்கா் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் ஆதரவு தெரிவித்தனா். அப்போது, சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத், டாக்டா் ஸ்ரீதா், டாக்டா் கனகராஜ், டாக்டா் வீரமணி, பாரா மெடிக்கல்ஸ் ஸ்ரீனிவாசன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்