ஈரோடு ஜீவானந்தம் ரோடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு..
ஈரோடு. ஜூன். 05
ஈரோடு அருகே உள்ள ஜீவானந்தம் ரோடு பகுதியில் சிதியில் அடைந்த நிலையில் உள்ள பழைய குடியிருப்பு கட்டிடத்தை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய குடியிருப்பு கட்டிடம் கட்டித் தர அப்பகுதி பொதுமக்கள் நேற்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஜீவானந்தம் ரோடு பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டித் தரப்பட்டுள்ள பழைய கட்டிடத்தை பிடித்து விட்டு அங்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது…
வணக்கம் கடந்த 140 ஆண்டு காலமாக தலைமுறை யாக, வாழ்ந்து வந்த தலித் சமுதாயத்தை சேர்ந்த மூதாதையர்கள், இருப்பு பகுதியான வடக்கு மற்றும் தெற்கு,, பெரும்பள்ளம் ஓடை பகுதிக்கு அருகில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கடந்த 1984 ஆம் ஆண்டு எங்களது குலசைகளை அகற்றிவிட்டு புதிதாக மேற்படி குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக குடியிருக்கும் பயனாளிகளை அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகளுக்கு 1986 ஆம் ஆண்டு அதுக்கு முன்னாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. மேலும் 40 ஆண்டு காலமாக குடியிருக்கும் எங்களை 1919 ஆம் ஆண்டு முதல் எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல், கால் செய்ய சொல்லி நிர்பந்திக்கின்றார்கள். ஆனால் நாங்கள் அங்கு பல தலைமுறைகளாக வசித்து வருவதால், வேறு எந்தப் பகுதிகளுக்கும் செல்ல விருப்பமில்லை.
எனவே மேற்கண்ட விலாசத்தில் உள்ள ஜீவானந்த வடக்கு தெற்கு பகுதியில் வசிக்கும்ம், அனைவருக்கும் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தற்போது உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை இடித்து விட்டு, தற்போதுள்ள அதே இடத்தில் புதிய அடுக்கு மாடி கட்டிடம் கட்டித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கதிரவன், சேகர், ஆனந்தன், விவேகானந்தன் ஆகியோர் முன்னிலையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இவ்வாறு அப்பகுதி பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுவில் குறிப்பு பெற்றுள்ளனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!