புதுச்சேரி:
புதுச்சேரி கடற்கரை சாலையில் மூன்று நாட்கள் நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று, ஒலி வசதி குறைவால் மாணவர்கள் அவதி அடைந்ததாக நடிகரும் சமூக சேவகருமான பாண்டி ரவி குற்றச்சாட்டு வைத்தார்.
அதன் எதிரொலியாக, இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அனைத்து பகுதிகளிலும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதன் மூலம், பழைய கோர்ட் முதல் செக்ரட்டேரியட் வரை நீளமாக வரிசையாக இருந்த மாணவர்கள் தெளிவான வழிகாட்டுதலுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் பயிற்சியை மேற்கொண்டனர்.
முன்னதாக, ஒலி வசதி குறைவால் ஏற்பட்ட சிரமங்களை சுட்டிக்காட்டி திரைப்பட நடிகரும் சமூக சேவகருமான பாண்டி ரவி கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று, ஒலி-ஒளி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்கள் இருந்த அனைத்து பகுதிகளிலும் சரியான நேரத்தில் ஸ்பீக்கர்கள் அமைத்ததற்காக அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், அரசு மற்றும் அரசு அதிகாரிகள், கல்வித்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய துறைகளும் இணைந்து அவரது கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு தேவையான ஒலி வசதிகளை செய்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ததற்காகவும் நடிகர் பாண்டி ரவி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய சிறப்பான ஏற்பாடுகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!