June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சியில் நியூஸ் 21 தேசிய தொலைக்காட்சி விருது வழங்கும் விழா

செஞ்சி மே 29
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த காரியமங்கலம் கூட்டு சாலையில் அமைந்துள்ள டேனி கல்வியல் கல்லூரியில்
நியூஸ் 21 தேசிய தொலைக்காட்சி சார்பில் விருது வழங்கும் விழாநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மண்டல தலைமை செய்தியாளர் அருண் பிரகாஷ் ,
செய்தியாளர் தமிழ் லாரன்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு நியூஸ் 21 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் அச்சுதன் சம்பத் தலைமை தாங்கினார்
சிறப்பு அழைப்பாளராக நியூஸ் 21 தேசிய தொலைக்காட்சி இயக்குனர் சுமன்மான் , முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் , பாலிமர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து விருதாளர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினர்.
செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் முனைவர் சையத் உஸ்மான் டேனி கல்வி குழுமத்தின் கல்வியாளர் முனைவர் சக்திவேல் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் மகாலட்சுமி
சட்ட ஆலோசகர் சதீஷ்
செக்கோவர் தொண்டு நிறுவன இயக்குனர் அம்பிகா சூசையராஜ் இ எஸ் கல்வியல் கல்லூரி முதல்வர் செந்தில் முருகன் வர்த்தகர் சங்க தலைவர் செல்வராஜ் செய்தி வாசிப்பாளர் லலிதா துரைக்கண்ணு கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்..
விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன இதில் சாதனையாளர் விருது,சமூக சேவகர் விருது ,தொழில் முனைவோர் விருது,நல்லாசிரியர் விருது,சிறந்த செய்தியாளர் விருது, வழங்கினர்.
நிகழ்ச்சியை உதவும் உள்ளங்கள் ட்ரஸ்ட் ஜான் சத்தியசீலன் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை கீதாஞ்சலி தொகுத்து வழங்கினர்.
நிகழ்ச்சியில்
ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி செஞ்சி ஒன்றிய செயலாளர் சந்தோஷ்
செய்தியாளர்கள் கள்ளக்குறிச்சி செய்தியாளர்
விஜய் ஸ்டீபன்
சேலம் மாவட்ட செய்தியாளர் ரமேஷ்
டேனி கல்வியல் கல்லூரி பேராசிரியர்கள் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.