செஞ்சி, அக்-31
செஞ்சி சந்தைமேடு பகுதியில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் இயங்கி வருகிறது. சங்கத்தில் விவசாயிகளின் வேளாண் விளை பொருட்களை மறைமுக ஏலம் மூலம் விற்பனை மேற்கொள்ளும் நடைமுறை 27.10.2025 அன்று தொடங்கப்பட்டது . இதன் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கான தொகை அன்றைய தினமே விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நெல் மறைமுக ஏலம் செய்யப்படும் துவக்க நிகழ்ச்சியில் விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் மாரியப்பன், பொது மேலாளர் தேசிங்கு, உதவியாளர் ரவி, பழனிவேல், மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மறைமுக நெல் கொள்முதல் நடைபெறும் மேலாண் இயக்குனர் தெரிவித்தார்.
செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில் நெல் மறைமுக ஏலம் துவக்கம்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்