July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி விழுப்புரம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் சாக்லேட் சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவி தனது பிறந்த நாளை முன்னிட்டு கடையில் சாக்லேட் வாங்கி வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.
சாக்லேட் வாங்கி சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீர் என்று வாந்தி மயக்கம் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .
தகவல் அறிந்த ஆசிரியர்கள் உடனே மாணவர்களை செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .

பிறகு அந்த சாக்லேட்டை வாங்கி பார்த்த போது காலாவதியான சாக்லேட் என தெரிய வந்தது

34 மாணவர்களில் 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து கண்காணித்து வருகினர்

தகவல் அறிந்த காவல் துறையினர் மாவர்களை விசாரித்து வருகின்றனர்.

இதனால் செஞ்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.