ஈரோட்டில் அரசியல் கட்சிகள் மரியாதை..
ஈரோடு. ஜூலை. 18
சுதந்திரப் போராட்ட மாவீரன் பொல்லான் அவர்களின் 221 வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில், ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து பெரிய அளவில் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், சேலம் உள்ளடங்கிய கொங்கு மண்டலத்தில், ஆங்கிலேயே அரசுக்கு எதிராக வீரத்துடனும், துணிச்சலோடும் மிகப்பெரிய அளவில் போராடியவர் தீரன் சின்னமலை. அவரோடு இணைந்து அந்தப் போராட்ட காலகட்டத்தில் அவருக்கு உறுதுணையாக நின்று ஆங்கிலேய படைகளுக்கு எதிராக போர் புரிந்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் பொல்லான் அவர்கள்.
சுதந்திரப் போராட்ட மாவீரன் பொல்லான் அவர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.
அவர் மறைந்த நாளான நேற்று அவருக்கு அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஜெயராமபுரத்தில் அவருக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அந்த வகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து கொங்குநாடு திராவிட கட்சியின் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் பாட்டன் ஏஜி சக்திவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து அண்ணாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதேபோல் மாவீரன் போலான் பேரவை சமூக நீதி கட்சி தலைவர் வடிவேல் ராமன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் மாவீரன் பொல்லான் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று பல்வேறு சமுதாய அமைப்புகளும் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்