புதுச்சேரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சிறப்பு நிகழ்ச்சி ஹோட்டல் ஜெயராமில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மகளிர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற சபாநாயகர் திரு.ஏம்பலம் ஆர். செல்வம், மாநில தலைவர் திரு வி.பி. ராமலிங்கம், மகளிர் அணி தலைவி திருமதி தாமரைச்செல்வி, மகளிர் அணி மாநில பொறுப்பாளர் திருமதி ஜெயந்தி, மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர்கள் திருமதி விஜயலட்சுமி மற்றும் திருமதி பிரியா ஆகியோர் கலந்து கொண்டு மகளிர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் சிறப்பு அழைப்பாளராக ஆந்திரா மாநிலம் பாஜக செய்தி தொடர்பாளர் திருமதி. சைத்தாநீ யாமினி ஷர்மா, நகர் மாவட்ட தலைவர் திரு கிருஷ்ணராஜ், மகளிர் அணி மாநில துணை தலைவிகள் மஞ்சு, மீனா, ஷகீலா, நகர் மாவட்ட தலைவி திருமதி. அனுராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் விளையாட்டு துறையில் சாதனை படைத்த தனுஜா (நேஷனல் கராத்தே), காயத்ரி ராமன் (இன்டர்நேஷனல் வாலிபால்), மௌனிகா (நேஷனல் கராத்தே) மற்றும் கீர்த்தனா (நேஷனல் கராத்தே) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பெண்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெண்களின் அதிகாரமளிப்பு, பாதுகாப்பு மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காக செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மற்றும் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதும் வலியுறுத்தப்பட்டது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்