சங்கராபுரம் ஜூலை 20
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் வசித்து வருபவர் பாபு மனைவி தீபா இவர்களுக்கு யஷ்வந்த்குமார் மற்றும் யோகப்பிரவீன்குமார் என்ற இரண்டு ஆண் மகன்கள் உள்ளனர் இந்நிலையில் தீபாவின் தந்தை ராஜேந்திரன் தனக்கு சொந்தமான பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள 80 -சென்ட் இடத்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீபாவின் மகன்கள் பெயரில் ராஜேந்திரன் தானமாக எழுதிக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது
இதனை தீபாவின் உடன் பிறந்த அண்ணன் காந்தகுமார் அந்த இடத்தை தனக்கு எழுதிக் கொடுக்கும்படி தீபாவிடம் அடிக்கடி கேட்டு சண்டை இட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது இதனால் தங்கையை கொலை செய்ய திட்டமிட்ட காந்தகுமார் ஆறு பேர் கொண்ட கூலிப்படையினருடன் தீபா வீட்டிற்கு சென்று வழக்கம் போல் சொத்து கேட்டு மது போதையில் தகராறில் ஈடுபட்டதாகவும் தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில் காந்தகுமார் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை தீபாவின் முகத்தில் தூவி தீபாவை சராமாரியாக வெட்டினர் இதனை தடுக்க சென்ற போது தீபாவின் கணவர் பாபுவையும் சராமாரியாக வெட்டிவிட்டு காந்தகுமார் கூலிப்படையுடன் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் தலை மற்றும் உடல் பகுதியில் பல்வேறு இடங்களில் படுகாயம் தீபா ரத்த வெள்ளத்தில் சரிந்து துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
மேலும் கைகள் துண்டாக வெட்டப்பட்டும்தலையில் படுகாயங்களுடன் மயங்கி கிடந்த தீபாவின் கணவர் பாபுவை மீட்டு அக்கம் பக்கத்தினர் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சொத்துக்காக உடன் பிறந்த சகோதரியை மிளகாய் பொடி தூவி கூலிப்படையடன் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவான காந்தகுமார் கூலிப்படை கும்பலை திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சொத்து பிரச்சினை காரணமாக உடன் பிறந்த சகோதரி என்று கூட பாராமல் அண்ணன் கூலிப்படை கும்பலுடன் சென்று கொடூரமாக கொலை செய்த சம்பவம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்