கோவை-டிச:24
தமிழகத்தில் முதல்முறையாக கோவை கொடிசியா மைதானத்தில் 90 அடி உயரமும், 250 அடி நீளமும் கொண்ட நீர்வீழ்ச்சி அமைப்புடன் ‘வொண்டர் ஃபால்ஸ்’ பொருட்காட்சி நடைபெற உள்ளது.
எவர்கிரீன் என்டர்டெயின்மென்ட் சார்பில் நடத்தப்படும் இந்த ‘Wonder Falls’ பொருட்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது.
வரும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையும், வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் இந்த பொருட்காட்சியை பார்வையிடலாம்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் துரை செந்தமிழ்செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி, திமுக ஐடி விங் செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்பி ஏ.பி. நாகராஜன், கோவை மாநகராட்சி வரிவிதிப்பு தலைவர் முபசிரா பானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் எவர்கிரீன் என்டர்டெயின்மென்ட் உரிமையாளர்கள் ஆஷிக் அலி, அஸ்ரப், அபுதாஹீர், ரஞ்சித் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!