தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் தெரிவித்தனர்…
ஈரோடு. மே. 29
தமிழக கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜிக்கு, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் தமிழகத்தில், தமிழக வெற்றி கழகம் கூடுதல் இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் கூட்டணி அமைத்து முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டு, கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறார்.
இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, விஜய் பாலாஜி தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் கதர் துறை அமைச்சர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவருக்கு கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் டி எஸ் ஏ சுப்பிரமணியம், மற்றும் மாநில செயலாளர் பா. கந்தவேல் ஆகியோர் நேரில் சந்தித்து, அமைச்சர் விஜய் பாலாஜிக்கு பொன்னாடை போர்த்தி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்