கிருஷ்ணகிரி, மார்ச் 11:
அகில இந்திய இளைஞர் மேம்பாட்டு கட்சியின் கொள்கைகளையும், லட்சியங்களையும் மக்களிடையே கொண்டு செல்லவும், கட்சியின் வளர்ச்சிப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துரிதப்படுத்தவும் புதிய நிர்வாகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சமூக ஆர்வலர் திரு. கா.மணி, DEEE அவர்கள் கட்சியின் “கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர்” பொறுப்பிற்கு இன்று முதல் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனரும் தலைவருமான R. வெங்கடேசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சமூக ஆர்வலர் திரு. கா.மணி, DEEE அவர்கள், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கட்சியின் கிளைகளை வலுப்படுத்தவும், இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சியின் மேன்மைக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
கட்சியின் அனைத்து மட்டத்திலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், புதிய மாவட்டச் செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை அகில இந்திய இளைஞர் மேம்பாட்டு கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!