June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், அகரம் ஊராட்சி காவேரிப்பட்டிணம் ஒன்றிய அவைத்தலைவர் மற்றும் முன்னாள் அகரம் ஊராட்சி மன்ற தலைவருமான இராமமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி. தமிழ்ச்செல்வி அவர்கள் மறைவுக்கு நேற்று கழக நிர்வாகிகளுடன் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் டிஎ.நாகராஜன், காவேரிப்பட்டினம் ஒன்றிய கழகச் செயலாளர் க.மகேந்திரன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் நகாபூசனம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், ஆவத்துவாடி முன்னாள் துணைத் தலைவர் முரளி, அருள், ஜெயசீலன், பாலு, தட்ரஅள்ளி ஜலபதி, ஆவத்துவாடி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்