June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக வழங்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தகவல்.

கள்ளக்குறிச்சி ஜீன் 03

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பொது விநியோகத் திட்ட மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தலைமையில் (01.06.2026) நடைபெற்றது.

பின்னர் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

தமிழக அரசு உத்தரவிற்கிணங்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது
விநியோகத் திட்ட மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம், பொது விநியோகத் திட்ட குற்ற புலனாய்வுத்துறை நடவடிக்கைகள், பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய அத்தியாவசியப் பொருட்களை தங்குதடையின்றி கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளவும், புதிய
குடும்ப அட்டை விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், பொது விநியோகத் திட்டப் பொருட்கள் பிற இடங்களில் ஏதும் விற்பனை ஆகாமல் இருப்பதை தீவிரமாக கண்காணித்து உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் வே.முத்தையன் உள்ளிகொண்டனர் கலந்து கொண்டனர்.