கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தும்,இதற்கு உடந்தையாக செயல்பட்ட கர்நாடக அரசை கண்டித்து செஞ்சி வழக்கறிஞர் சங்கம் மற்றும் அட்வகேட்ஸ் அசோசியேஷன் சங்கம்
சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் எதிரில்நடைபெற்றது.
செஞ்சி வழக்கறிஞர் சங்கத் தலைவர், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
அட்வகேட் அசோசியன்ஸ் சங்கத் தலைவர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார்.வழக்கறிஞர் அன்பு செல்வன் அனைவரையும் வரவேற்கிறார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டு கர்நாடகாவில்தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகளையும் கர்நாடக அரசையும் கண்டித்து கண்டன கோஷமிட்டனர் மேலும் உடனடியாகதமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உரிய விசாரணை நடத்திதமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினருக்கு தண்டனைபெற்றுத் தர வேண்டும் ,உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தாருக்கு அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும்என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் தொண்டூர் சுப்பிரமணியன், அரிகிருஷ்ணன், பிரவீன், புண்ணியகோட்டி, பேட்டை ஆறுமுகம், அசுருதீன், வீரபாண்டியன், அன்பு பழனி, ஐயப்பன், ஹரிகுமார்,சரவணன், சந்திர பிரகாஷ், சின்னதுரை, காளிதாஸ் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்
மேலும் செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் வழக்கறிஞர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் நீதிமன்றப் பணிகளில் இருந்து விலகி இருப்பது என முடிவு செய்துநீதிமன்ற பணிகளை புறக்கணித்துள்ளனர்.வழக்கறிஞர் சுதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…