July 31, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கட்டிடங்களுக்கு உதவும் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது ரெனாகான்

கோவை ஜூலை:31

ஈரோட்டைச் சேர்ந்த ரெனாடஸ் குழுமம் தனது ரெனாடஸ் பிராடக்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் மூலம் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது. பசுமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டிடங்களைக் கட்ட இந்த போர்டுகள் உதவும்.
₹350 கோடி முதலீட்டில் ரெனாகான், ஆந்திரப்பிரதேசத்தின் நாயுடுப்பேட்டையில் ஏ.ஏ.சி பிளாக்ஸ் ரேபிட் வால் பேனல்ஸ் மற்றும் ஃபைபர் சிமெண்ட் போர்டு ஆகியவற்றின் உற்பத்திக்காக உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த தொழிற்சாலையை நிறுவியுள்ளது.வெறும் 12 மாதங்களில் கட்டமைக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை,உலகளவில் அளவுகோலாகக் கருதப்படும் லேமினார் ஃப்ளோ டெக்னாலஜி-யை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி,நவீன கட்டுமானத்தின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய துல்லிய-பொறியியல் வடிவமைப்பைக் கொண்ட நிலையான கட்டுமானப் பொருட்களை வழங்குகிறது.

இது குறித்து ரெனாடஸ் குழுமத்தின் தலைவர் பி.செல்வசுந்தரம் கூறுகையில்,கோவையில் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் அறிமுகமாவது,முழுமையான கட்டுமானத் தீர்வுகள் வழங்குநராக மாறும் ரெனாகானின் பயணத்தில் ஒரு மைல்கல் ஆகும். தென்னிந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறை மற்றும் ரியல் எஸ்டேட் மையங்களில் ஒன்றாகிய கோவை,நவீன மற்றும் நிலையான கட்டுமான முறைகளை விரைவாக ஏற்றுக்கொண்டு வருகிறது.

எங்களின் முதன்மை குடியிருப்புத் திட்டமான ‘வரம்’மூலம் ஏற்கனவே கோவையில் வலுவான இருப்பை உருவாக்கியுள்ள நிலையில்,தற்போது ரெனாஃபிளக்ஸ் அறிமுகத்தின் மூலம்,இச்சந்தையின் மீது நாங்கள் கொண்டிருக்கும் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறோம்.ரெனாகான்,முதற்கட்டமாக தமிழ்நாடு,ஆந்திரப் பிரதேசம்,தெலங்கானா,கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களில் கவனம் செலுத்தி பின்னர் ஐரோப்பா,மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள சர்வதேச சந்தைகளில் தனது போர்டுகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

ரெனாடஸ் பிராடக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மொத்த வணிகத்தில்,50% பங்களிப்பு ஏற்றுமதி வணிகத்தின் மூலம் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.முன் தயாரிப்பு கட்டுமானம்,நிலைத்த கட்டுமானப் பொருட்கள் மற்றும் தீ-மதிப்பீடு பெற்ற கட்டிட அமைப்புகளுக்கான தேவை அதிகரிப்பது,உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகள் இரண்டிலும் வலுவான வளர்ச்சிக்கு தூண்டிலாக அமையும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.