ஈரோடு தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் வழங்கினார்..
ஈரோடு. பிப். 07
ஈரோடு மாவட்டம் தெங்குமரகடா பகுதியில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் இன அரசு பள்ளிக்கு ஈரோடு தயா அறக்கட்டளை சார்பில் பல்வேறு நடைபெற்ற உதவிகள் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, தெங்குமரகடா பகுதியில் செயல்படும் பழங்குடியினர் இன மாணவர்கள் படித்து வரும் அரசு உண்டி உறைவிட பள்ளிக்கு தேவையான சமையல் பாத்திரங்கள் மற்றும் பள்ளிக்குத் தேவையான பல உபகரணங்கள் மற்றும் அந்தப் பள்ளியில் படித்து வரும் பழங்குடியினர் என மாணவர்களுக்கு, விளையாட்டுக்கு தேவையான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நலத்திட்ட உதவிகளை ஈரோடு தயா அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!