குடிமைப் பணி முதல் நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்ற பார்வை குறைபாடு உள்ள மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கல்..
ஈரோடு. டிச.,, 08

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நேற்று மக்கள் குறைத்திருக்கும் நாள் கூட்டம்.
இந்த கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்து தங்களின் கோரிக்கை மனுக்களை கூட்ட அரங்கில் ஆட்சியரிடம் வழங்கினர்.
மொத்தம் 225 மனுக்கள் வரப்பட்டு இருந்த நிலையில் அந்த மனுக்கள் மீது மேல் நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் பொதுமக்களின் மனுக்களின், இலவச வீட்டு மனை பட்டா, இலவச வீட்டு மனை, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கருணை அடிப்படையிலான அரசு வேலை, மற்றும் தங்கள் உள்ளூர் பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை.
மேலும் காவல்துறை சார்ந்த மனுக்களும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்களும் ஆய்வு செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும் கொடுமைப் பணி முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற பார்வை குறைபாடு உள்ள மாணவிகளுக்கு, தலா 50,000 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
மேலும் குழந்தைகள் நல திட்ட குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆட்சியரை சந்தித்து பேசினர்.
அந்தப் குழுவில் இடம் பெற்றிருந்த புதியதாக அமைக்கப்பட்ட குழந்தைகள் நல குழு தலைவர் ஆர். ராம பிரபா மற்றும் உறுப்பினர்கள் ஸ்ரீலேகா செல்வம், ஆர். பிரிசிதா, முகமது நசீர், தம்பி ராஜா ஆகியோர் ஆட்சியர் கந்தசாமி மரியாதை நீர்த்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்