July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்..

425 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் மேல் நடவடிக்கைக்கு உத்தரவு..

ஈரோடு. ஜூலை. 14

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் பொதுமக்களுக்கான, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சிய ச. கந்தசாமி தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் கொடுத்தனர். எந்த வகையில் நேற்றைய கூட்டத்தில் 425 மனுக்கள் பொதுமக்களால் கோரிக்கை வைத்து கொடுக்கப்பட்டது.

இந்த மனுக்களில் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, மற்றும் இலவச வீட்டுமனை கேட்டும், இலவச வீட்டு மனை பட்டா கேட்டும் கல்விக்கடன் கேட்டும் மற்றும் தங்களின் பகுதிகளில் உள்ள குறைகள் குறித்தும் தார் சாலை வசதி, தெரு விளக்கு வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காவல் நிலையத்தில் உள்ள புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தங்களின் மனுக்கள் மூலம் ஆட்சியரிடம் கோரிக்க வைத்தனர்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் கந்தசாமி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்து உடனடி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்தக் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளில் சார்பில் பொதுமக்களுக்கு, மாணவ மாணவிகளுக்கு நலதெட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.