திருப்பூர் -ஜூலை :20,
தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை அமைச்சர் க.விக்னேஷ் அவர்களை திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் நேரிடையாக சந்தித்து மனு அளித்தார்.
அதில் திருப்பூர் மாநகர், கொங்கு மெயின் ரோடு, ரங்கநாதபுரத்தில் கோவில், மாநகராட்சி பள்ளி, பள்ளிவாசல் மற்றும் இ எஸ் ஐ மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் 1909 எண் கொண்ட அரசு மதுக்கடையை மக்களுக்களுடைய நலன் கருதி உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்.
1909 எண் கொண்ட டாஸ்மாக் கடைக்கு நேர் பின்புறமாக பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கடையில் இருந்து சுமார் 250 மீட்டர் தூரத்தில் மாநகராட்சி பள்ளி அமைந்துள்ளது. இதற்கு இடையில் இரண்டு கோவில்கள் அமைந்துள்ளது.
இந்த கடைக்கு தென்புறம் விநாயகர் மற்றும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கடைக்கு மேற்கு புறமாக சுமார் 300 மீட்டர் தூரத்தில் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்தக் கடைக்கு அருகிலேயே சுமார் 40 மீட்டர் தூரத்தில் இ எஸ் ஐ மருத்துவமனையும் அமைந்துள்ளது.
மேலும் இந்த கடையானது நூற்றுக்கணக்கான குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்