கோவை மார்ச்:08
கோவை சின்ன தடாகம் காளையனூர் தண்ணீர் பந்தல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத மச்ச அவதார பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதனை ஸ்ரீ சத்ய நாராயண பட்டார் பாஞ்ச ராத்ர ஆகம முறைப்படி நடத்தி வைத்தார்.மாசி மாதம் 18ம் நாள் முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கப்பட்ட நிகழ்வில்,புண்ணிய தீர்த்த யாத்திரைக்கு பக்தர்கள் புறப்பாடு,முளைப்பாரி எடுத்து வருதல்,வாஸ்து சாந்தி முதல் கால யாக வேள்வி,ஆரம்பம் விஷ்வக்சேனர் ஆராதனை,இரண்டாம் கால யாக வேள்வி,லஷ்மி நாராயண ஹோமம்,சுதர்சன ஹோமம் தொடர்ந்து மாசி மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று பெருமாளுக்கு காலை மகா கும்பாபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது.இதில் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!