அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செந்துறை ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களில் பல்வேறு கிராமங்களுக்கு தடையில்லா போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் சாலை மேம்படுத்தும் பணி மற்றும் ஒரு வழி சாலைகளை இருவழி சாலைகளாக அகலப்படுத்தும் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தேசிய நெடுஞ்சாலையால் கைவிடப்பட்ட ஓடுதளத்தின் தரத்தை மேம்படுத்துதல், செந்துறை ஒன்றியத்தில் உஞ்சினி கிராமத்திலிருந்து வாரியங்காவல் வரையிலான ஒரு வழி சாலையை இருவழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல், அரியலூரிலிருந்து செந்துறை வரை இரு வழி தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக சாலை அகலப்படுத்தி தடுப்பு சுவர் மற்றும் மைய தடுப்பு அமைத்தல், செந்துறையிலிருந்து புது வேட்டக்குடி வரை சாலையின் தரத்தை மேம்படுத்துதல், பொன்பரப்பி திட்டக்குடி சாலையை ஒரு வழி சாலையிலிருந்து இருவழி சாலையாக தரம் உயர்த்துதல், செந்துறை திருமாந்துறை வரையிலான சாலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சாலை பணிகளையும் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
மேலும் உடையார்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படவுள்ள லாரியின் சேவைவையும் தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் பல்துறை அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரியலூர் – பல்வேறு கிராமங்களை இனைக்கும் வகையில் சாலை மேம்படுத்தும் பணி மற்றும் ஒரு வழி தடத்திலிருந்து இரு வழி தடமாக மாற்றும் பணி என 25 கோடியே 63 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.