வந்தவாசி, டிச 12:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கடைசி குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமிபாய் தலைமை தாங்கினார். வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க தகவல் தொடர்பாளர் கேப்டன் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் பங்கேற்று, பாரதி கண்ட பாரதம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் பாரதியார் வேடமிட்டு பாரதியார் குறித்த பாடல், பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் சமூக ஆர்வலர் சுரேந்தர் நன்றி கூறினார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்