அரியலூர் மாவட்டம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் சின்னதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரியலூர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் அசோகன் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்
மகாகவி பாரதியார் இந்திய விடுதலைக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும்அரும்பாடு பட்டவர் அவரை உற்று நோக்குங்கள்
அவரது கவிதைகளை ஆழ்ந்து படியுங்கள் நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்த பொழுது தம் பாடல்கள் மூலம் விடுதலை வேட்கையை தூண்டியவர்
பல மொழிகளை கற்றுத் தமிழ் மொழியின் சிறப்புகளை பல்வேறு கவிதைகள் பாடல்கள் ஆகியவற்றின் மூலம் உலக மக்களுக்கு வழங்கியவர் வழங்கியவர்.
எனவே பள்ளி மாணவிகள் பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருக்க வேண்டும்.
அச்சமின்றி அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்றார் .
பாரதியார் பாடல்கள் கவிதைகள். ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆசிரியர்கள் வெங்கடேசன் அந்தோணி டேவிட் . அபிராமி ஆய்வக உதவியாளர் மணிகண்டன் பயிற்சி ஆசிரியர்கள் காஞ்சனா. கார்த்திகா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர் . பாரதியார் திருவுருவ படத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
ஆசிரியை தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார். செந்தமிழ் செல்வி நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்