July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசு ஜீப் முன் நின்று ரீல்ஸ்..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாசில்தார் மீது எழும் சர்ச்சை..

அமைச்சர்கள் மீது ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து அதிகாரிகளும் சர்ச்சையில் சிக்கும் அவலம்.

ஈரோடு., ஜூலை. 01

தொடர்ந்து அமைச்சர்களின் செயல்பாடுகளால் சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில், அரசு அதிகாரிகளின் செயல்காலம் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாசில்தாராக பணியாற்றி வருபவர் ஜமுனா ராணி. இவர் சத்தியமங்கலம் தாசில்தாராக பொறுப்பேற்று முதல், அங்குள்ள மலை கிராமங்களுக்கு அரசு ஜிப்பை எடுத்துக்கொண்டு மலை பகுதிகளின் அழகை ரசிக்க சென்று விடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில். இவர் மீது மற்றும் ஒரு சர்ச்சை புகார் எழுந்துள்ளது.

சத்தியமங்கலம் தாசில்தார் ஜமுனா ராணி அரசு பணிக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அரசு பொலிரோ ஜிப்பை, தன்னுடைய சொந்த பணிகளுக்காகவும், மலைப்பகுதிகளின் அழகை ரசிக்க பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு தாசில்தார் ஜமுனா ராணி தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு ஜிப்பை எடுத்துக்கொண்டு ஒரு மலை பாங்கான இடத்திற்கு சென்று அங்குள்ள இயற்கை அழகை ரசித்து வீடியோ ரிலீஸ் எடுத்தும், அரசு ஜீப் முன்பு நின்று இயற்கை அழகை கவர் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்தும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்தக் காட்சியில் பின்னணியில் ஒரு ஜவ்வாது பெண்ணானது.. இரண்டு செம்மீன்கள் கண்ணானது.. என்று ஒலிக்கும் சினிமா பாடல் வருகிறது.

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் அரசு அமைந்தது முதல், அமைச்சர் முதல் கட்சியினர் வரை அரசு அலுவலகங்களில் வீடியோ ரிலீஸ் எடுத்து வெளியிட்டு தங்களை பொதுவெளியில் காட்டிக் கொள்கின்றனர்.

இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அரசுத் துறையில் ஒரு முக்கிய பொறுப்பில் ஒரு வட்டத்தின் ஆட்சியராக, வட்டாட்சியராக உள்ள ஒரு பெண் அதிகாரி, அதுவும் மலை கிராமங்கள் உள்ளடங்கிய ஒரு தாலுகாவிற்கு தாசில்தாராக பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரி, பல்வேறு குறைகளுக்காக மலை கிராம மக்கள் தன்னைத் தேடி, தனது அலுவலகத்திற்கு வருவார்கள் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல், அரசு ஜிப்பை எடுத்துக்கொண்டு பணி நேரத்தில் ஒரு இன்ப சுற்றுலா சென்றது போல் நினைத்துக் கொண்டு, அரசு ஜீப் முன் நின்று இயற்கை அழகோடு தான் ஒன்று இருப்பது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு மகிழ்ந்து கொள்வது என்ன மாதிரியான ஒரு செயல் என்று பொதுமக்கள் கோபத்தில் கொந்தளிக்கின்றனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இவர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

சத்தியமங்கலம் வட்டாட்சியர் ஜமுனா ராணியின் இந்த செயல் அரசு அலுவலர்கள் மத்தியில் ஒரு அருவருப்பை ஏற்படுத்தி உள்ளது.