July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அயல் நாட்டிலிருந்து தாய்நாட்டுக்குத் திரும்பிய மு.க. ஸ்டாலின் எடுக்கப் போகும் மிகப் பெரிய முடிவு!

இந்தியாவின் அயல்நாடான லண்டனுக்கு சென்றிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னைக்கு வந்தடைந்தார். அவரை வரவேற்க திரண்டிருந்த திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேரனும், சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப் படிப்பை முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்பநிதி பட்டம் பெற்றார்.

பட்டம் பெறும் பேரனை நேரில் வாழ்த்துவதற்காக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவரது துணைவியார் துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். பின்னர், உதயநிதியும் தனது மனைவி கிருத்திகாவுடன் லண்டன் சென்றார். பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் பங்கேற்ற தமிழ்நாட்டின் மாஜி முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரனைக் கட்டியணைத்து வாழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து சில நாட்கள் லண்டனில் ஓய்வெடுத்த மு.க.ஸ்டாலின், தனது பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டது. காலை 7 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையம் வருவதாக இருந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் தயாராக இருந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஏராளமான திமுகவினர் மு.க.ஸ்டாலினை வரவேற்க காத்திருந்தனர். திமுக மூத்த தலைவர்களும் மாஜி மந்திரிகளுமான கே.என்.நேரு, பொன்முடி, சக்கரபாணி, காந்தி, மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு வருகை தந்தனர்.

மு.க.ஸ்டாலினின் காரும் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. தாரை தப்பட்டையுடன் வரவேற்கத் தயாராக இருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி லண்டன் விமானத்தில் மு.க.ஸ்டாலின் வந்து சேரவில்லை. எனினும், திமுக தலைவர்களும் தொண்டர்களும் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

இதையடுத்து, ஸ்டாலின் விமானத்தை தவறவிட்டுவிட்டதாக தகவல் வெளியானது. திமுக மாஜி மந்திரி தா.மோ.அன்பரசன், அங்கு கூடியிருந்த திமுகவினரிடம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமானத்தை தவற விட்டுவிட்டதாகவும் இன்று இரவு தான் வருவார் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, திமுகவினர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் மு.க. ஸ்டாலின் வந்திறங்கினார். அவரை திமுக மாஜி மந்திரிக்கள் கேஎன் நேரு உள்பட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். முக ஸ்டாலினுக்கும் புத்தகம் கொடுத்து வரவேற்றனர். இந்த வேளையில் திமுக தொண்டர்கள் வாழ்க வாழ்க் மு.க் ஸ்டாலின் என்று கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்த திமுக அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. கூட்டணியில் இருந்த முக்கிய கட்சிகளின் பெரும்பாலானவை வெளியேறிவிட்ட நிலையில் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த நிலையில் 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார் என்கின்றனர். அது என்ன? என்பதுதான் தற்போதைய கேள்வி.

தமிழ்நாட்டு அரசியலில் ‘2026’ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காரணம் தமிழக வெற்றிக்கழகத்தின் எழுச்சி. திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி ஆளுங்கட்சியாக பொறுப்பு ஏற்று இருக்கிறது. எதிர்க்கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் இருந்த அதிமுகவும் திமுகவும் இன்று எதிர்க்கட்சி வரிசையில் ஒன்றாக அமர்ந்துள்ளன.

இதுதான் தமிழ்நாட்டு அரசியலில் புதிய அத்யாயத்தை தொடங்கி வைத்திருக்கிறது. அதே நேரத்தில் ஆட்சியை இழந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆளுங் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பது, ஆலோசனை வழங்குவது என திமுக பரபரப்பாக இயங்கி வருகிறது.

அதே நேரத்தில் ஆட்சி கவிழும், ஆறு மாதத்தில் தேர்தல் என்பது போன்ற சில கருத்துக்கள் மட்டுமே திமுகவுக்கு எதிர்மறை விமர்சனங்களை பெற்று தந்திருக்கிறது. மேலும் புதிய அரசு செயல்பட குறைந்தபட்ச கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் திமுக கூட்டணியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ், விடுதலை, சிறுத்தைகள், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என மிகப் பெரும் கூட்டணி பலத்துடன் இருந்த கூட்டணி உடைந்திருக்கிறது.

விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தவெக பக்கம் சாய்ந்து விட்டன. இந்த சூழலில் 2029 மக்களவைத் தேர்தலை எதிர் கொள்ள திமுக தயாராகி வரும் நிலையில் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. தேசிய அரசியலை பொறுத்தவரைப் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இடையே தான் போட்டி இருக்கிறது.

கடந்த காலங்களில் அதாவது 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி என மூன்றாவது அணிகள் அமைந்திருந்தாலும் காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவு அந்த கூட்டணிகளுக்கு தேவைப்பட்டது. இதனால் தேசிய அரசியலில் மூன்றாவது அணிக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு வழங்கவில்லை என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை. இப்போதைக்கு திரிணாமுல் காங்கிரஸ், பிஆர்எஸ், ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற மாநில கட்சிகள் தங்கள் மாநிலத்திலேயே பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.

எனவே திமுக இந்த கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய அளவில் மூன்றாவது கூட்டணி அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டதாக சொல்கின்றன. அதே நேரத்தில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் அத்தகைய வாய்ப்பு மிக குறைவாக இருப்பதாகவே அரசியல் பார்வையார்கள் சொல்கின்றனர்.

இன்னொரு காரணம் திமுகவின் முக்கியமான வாக்கு வங்கி. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்தாலும் பல நகர்ப்புற மற்றும் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது அல்லது வெற்றிக்கு அருகே சென்று இருக்கிறது. சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் தோற்று இருந்தாலும், அங்கும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதிகளை திமுக தனது வாக்கு வங்கி தக்க வைத்திருக்கிறது.

திராவிட அரசியல், மதச்சார்பற்ற கொள்கை, முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் திமுகவின் முக்கிய ஆதரவு வட்டமாக இருக்கின்றனர். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது பாஜகவுடன் கூட்டணி அமைப்பது திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால், பாஜக கூட்டணி வேண்டாம் என்ற முடிவை மு.க.ஸ்டாலின் எடுத்திருப்பதாக சொல்கின்றனர்.

2029 மக்களவைத் தேர்தல், வர இருக்கிற உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல 2031 சட்டப்பேரவைத் தேர்தலையும் கணக்கில் வைத்து தான் திமுக தலைமை செயல்படும். தற்போதைக்கு கூட்டணி கட்சிகள் விலகி இருப்பது தற்காலிகம் தான் என திமுக தலைமை நம்புகிறது. இதற்காக தேசிய அளவில் மூன்றாவது கூட்டணி பாஜகவுடன் கூட்டணி என்பதெல்லாம் கட்டுக்கதை என்றும் 2029 தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் மாறும் அப்போது மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய முடிவை எடுப்பார் என்கின்றனர் திமுகவினர்.