செஞ்சி ஜன-08, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதி செஞ்சி நான்கு முனை சந்திப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி சேர்ந்த அதிமுக பாமக பாஜக ஆகிய கட்சிகளின் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
இன்று பாமக அதிமுகவுடன் கூட்டணி அறிவித்ததை தொடர்ந்து செஞ்சி நான்கு முனை சந்திப்பில் செஞ்சி நகர அதிமுக செயலாளர் சுந்தர்ராஜன்,
பாமகவைச் சேர்ந்த மாநில இளைஞர் சங்க துணை தலைவர் பொறியாளர் அருண்மொழிதேவன்,
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாவட்ட பொதுசெயலாளர் ஜி.அன்பழகன், ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகி கு.கண்ணன், தொகுதி செயலாளர் வழக்கறிஞர் வேலவன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெ.கமலக்கண்ணன், பாமக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் திருமலை, ஆப்செட் முருகன், மாவட்ட வன்னியர் சங்க அமைப்பு தலைவர செஞ்சி அய்யனார், பாஜக நிர்வாகிகள் ஊடகப்பிரிவு கோபி, பாட்டாளி உதயா, மாவட்டத் துணைத் தலைவர் ஏழுமலை, ஒன்றிய தலைவர் தாராசிங், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் தங்கராமு, உள்ளிட்ட கூட்டத்தில் பங்கேற்றனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!