தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஆணைமலையான்பட்டியைச் சோ்ந்தவா் சுதாகரன் (51). இவா், ஒசூா் அன்னை நகரில் தங்கி உள்ளாா். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி பிற்பகல் இப்பள்ளியின் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு சுதாகா் பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினாா். இதையடுத்து, மாணவியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் வாசுகி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சுதாகரனைக் கைது செய்தாா்.
அஞ்செட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் கைது

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!