சேலம்: நவ : 10
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் “நம் குடும்பம், நம் வீடு” என்று வாழும் மக்களிடையே “நம் கிராமம், நம் மக்கள்” என்ற எண்ணத்துடன் செங்கலத்துப்பாடி மக்கள் கிராமத்தின் வளர்ச்சிக்காக புதிய முயற்சியை எடுத்து, ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கினர்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, *தமிழகத்தின் பல கிராமங்களின் முன்னேற்றத்திற்கும் சமூக நலனிற்கும் வழிகாட்டி விஜய் அவரின் தலைமையில் இயங்கும் “யூனிட்டி ஆஃப் யூத் ஃபவுண்டேஷன்” அமைப்பின் ஆதரவுடன், இன்று செங்கலத்துப்பாடி கிராமத்தில் மாலை நேர பயிலகம் மற்றும் பாரம்பரிய கலையின் சிலம்பம் பயிற்சி மையமும் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் நிறுவனர் திரு விஜய் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பழனி, சுந்தரம், மற்றும் லக்ஷ்மன்,கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், சர்வதேச அளவில் சாதனை படைத்த ஏற்காடு குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனுஷ்கா மற்றும் மாணவன் மதன் ஆகியோர் தங்கள் வெற்றிப்பாதையை செங்கலத்துப்பாடி மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு, இளைஞர்களுக்கு ஊக்கமளித்தனர்.
இம்முயற்சி மூலம் செங்கலத்துப்பாடி மக்கள், கல்வி, விளையாட்டு, பெண்களின் முன்னேற்றம், தொழில் வாய்ப்பு மற்றும் மருத்துவ நலன் போன்ற பல துறைகளில் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக ஒற்றுமையாக செயல்படவுள்ளதாக உறுதியளித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்