வந்தவாசி, நவ 23:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ் சங்கம் சார்பில் பல்சுவை அரங்கம் நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு சங்கத் தலைவர் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மா.கதிரொளி முன்னிலை வகித்தார். செயலாளர் ஆ.மயில்வாகனன் வரவேற்றார்.
முதலாவதாக நடைபெற்ற கவியரங்கில் தகவல் தொடர்பாளர் கவிஞர் மு.பிரபாகரன், தலைமை ஆசிரியர் லியோ பெலிக்ஸ் மேத்தா, பேராசிரியை ஜான்சி ராணி, முதுகலை ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று செந்தமிழ் கவிதைகளை வாசித்தனர். மேலும் புலவர் மா.ரகுபதி குழுவினரின் ‘என்றுமுள தென் தமிழ்’ என்ற தலைப்பில் வில்லுப்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை துணைத் தலைவர் கோ. ஸ்ரீதர் தொகுத்து வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பிச்சாண்டி, அங்கையன், புலவர் ஏழுமலை, கு.ராமஜெயம், சு. வெங்கடேசன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர். இறுதியில் சங்க பொருளாளர் த.முருகவேல் நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்