June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேவபாண்டலம் கார்குழலி நினைவு அறக்கட்டளை மற்றும் பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கம் இணைந்து நடத்திய குழந்தைகள் தின விழா

சங்கராபுரம் நவ 16

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கார்குழலி நினைவு கல்வி அறக்கட்டளை மற்றும் பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கம் இணைந்து செம்பராம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பி.முனியப்பிள்ளை தலைமையிலும், ஊராட்சி மன்ற தலைவர் த.வைத்தியநாதன், அரிமா சங்கத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் கார்குழலி அறக்கட்டளை செயலாளர் தா.வசந்தா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் பவி கிருஷ்ணவேணி, சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்க செயலாளர் சக்திவேல் அரிமா ஆர்.கே.செல்வமணி ஆகியோர் வரவேற்றனர்.

பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா போட்டியில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பாவலர் புதுவை சு.சண்முகசுந்தரம் மத்திய சுங்கம் மற்றும் கலால் துறை இணை ஆணையர் (ஓய்வு) அவர்களும் அரிமா சங்க மாவட்ட தலைவர் க.வேலு அவர்களும் பரிசுகள் வழங்கினார். இந்திய அளவில் குண்டு எறிதல் தட்டு எறிதல் போட்டியில் கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் தேர்வான சங்கராபுரம் நியூ பவர் பள்ளி மாணவி எஸ்.நித்தீஸ்வரிக்கு தேவபாண்டலம் தொழிலதிபர் ஆறு.கதிரவன் நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். விழாவில் சேவை செம்மல் இராம முத்து கருப்பன் அனைத்து பொது சேவை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் கவிஞர் மு.முருககுமார் தலைவர் கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் கவிஞர் இரா கோ. கலைமகள் காயத்ரி, துணைத் தலைவர் கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சங்கராபுரம் லைன்ஸ் தலைவர் எஸ்.வேலு, செயலாளர் ஏ.மீரான் ஷா, பொருளாளர் ஆர்.துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளி பட்டதாரி ஆசிரியர் கே.கார்த்திகேயன் மற்றும் கார்குழலி நினைவு அறக்கட்டளை நிறுவனர் இராசு.தாமோதரன் நன்றி கூறினார்.