July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் – நமது ஆட்சி வந்தவுடன் சோழர் பாசன திட்டத்திற்கான அரசாணை ஒரு மாதத்தில் வெளியிடப்படும் அன்புமணி ராமதாஸ் உறுதிசெய்தியாளர்களின் கேள்வியால் டென்ஷனான அன்புமணி ராமதாஸ்

அரியலூர் மாவட்டத்தில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தா. பழூர் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி தீர்த்தக்கத்தினை பார்வையிட்டார் அப்பொழுது நீர் தேக்கத்தின் பரப்பளவு பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் கேட்டறிந்தார்

பின்னர் அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோ கலந்து கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் அரியலூர் மாவட்டத்தில் சோழர்களின் ஆட்சி காலத்தில் பொன்னேரி கண்டிராதித்தம் பெரிய ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெட்டப்பட்டு பாசன வசதி பெற்று வந்தன. இந்த ஏரிகளை முறையாக பராமரிக்காத நிலையில் அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என எனது தலைமையில் மூன்று வருடங்களுக்கு முன்பு நடைபயணம் கையெழுத்து இயக்கம் உள்ளிட்டவைகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபட்டு இது குறித்து அரசிடமும் அறிக்கை அளிக்கப்பட்டது தற்போது வரை இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை நீர் மேலாண்மை பற்றி அறியாத திமுக அரசு இன்னும் நான்கு மாதங்களில் அகற்றப்படும் பிறகு வரக்கூடிய நமது ஆட்சியில் ஒரே மாதத்தில் சோழர் பாசன திட்டம் அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்படும் என கூறினார்

நமது ஆட்சி என்றால் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான ஆட்சியா கூட்டணி ஆட்சியா என்ற கேள்விக்கு அப்பொழுது தெரியவரும் எனக் கூறினார் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்று கேள்விக்கு நடைபெற்று வருவதாகவும் அது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார் என்டிஏ கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உண்டா என்ற கேள்வியால் டென்ஷனான அன்புமணி ராமதாஸ் என்னிடமிருந்து எதையாவது வாங்க வேண்டும் என்பது உங்களது எண்ணம்மா எனக் கூறி சென்றார்