February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,08/11/2025.

சேலத்தில் 2 மூதாட்டிகளை கொன்ற கொடூர அரக்கன் என்னும் அய்யனார்.

சேலத்தில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட அய்யனார் யார்? நடுங்க வைக்கும் தகவல்.

சேலத்தில் 2 மூதாட்டிகளை கொன்று நகைகளை கொள்ளையடித்து உடல்களை கல்குவாரியில் வீசி சென்ற வழக்கில் அய்யனார் என்பவரை இன்று போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

இந்நிலையில் தான் அந்த அய்யனார் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை தூதனூர் காட்டுவளவு கல்குவாரியில் கடந்த 4ம் தேதி 2 மூதாட்டிகள் இறந்து கிடந்தனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இருவரின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தூதனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலையின் மனைவியும், பெரியம்மா( வயது 75) என்பதும், இ.காட்டூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மனைவி பாவாயி (70) என்பதும் தெரியவந்தது.

இதில் பெரியம்மா ஆடு மேய்க்கவும், பாவாயி விவசாய கூலி வேலைக்கும் சென்ற நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டது தெரியவந்தது.அதோடு பெரியம்மா அணிந்திருந்த இரண்டு கம்மல், மூக்குத்தி, கால் காப்பு. பாவாயி அணிந்திருந்த கம்மல், கால் காப்பு ஆகியவை மாயமாகியிருந்தது. இதனால் நகைக்காக அவர்கள் 2 பேரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இதுதொடர்பாக 3 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் சேலம் அடுத்த கருப்பூர், வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார்(55) என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இவர் ஒருக்கா மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் இன்று காலையில் பிடிக்க சென்றனர். அப்போது அவர் போலீஸ்காரரின் கையில் அரிவாளால் வெட்டினார்.

இதையடுத்து தற்காப்புக்காக அய்யனாரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காலில் காயமடைந்த அய்யனார் சுருண்டு விழுந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு காயமடைந்த போலீஸ்காரர் மற்றும் கொலையாளி அய்யனார் ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான், துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட அய்யனார் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் மீது ஏற்கனவே 5 கொலை வழக்கு பதிவாகி உள்ளது. மேலும் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றார்.

அதன்பிறகு அவர் கடந்த 2019ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அதன்பிறகும் கூட அய்யனார் திருந்தவில்லை. அவர் நகைகளை கொள்ளையடித்து 2 மூதாட்டிகளை கொன்று கல்குவாரியில் வீசியதோடு, பிடிக்க சென்ற போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி இப்போது குண்டு காயமடைந்து சிகிச்சையில் உள்ளார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp