வந்தவாசி, நவ 25:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினருக்கு நல வாரிய உறுப்பினர் அட்டையை வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் வழங்கினார். இதில் வந்தவாசி சத்யா நகர், கீழ்க்கொடுங்காலூர், வெடால், இராம சமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 200 பழங்குடியின குடும்பங்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.சம்பத் குமார் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் மேனகா முன்னிலை வகித்தார். நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்வட்ட ஆய்வாளர் தேவன், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாநில செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் அப்துல் காதர், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகா, ஒருங்கிணைப்பாளர் சுகுணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்