நவ:27
கோவை பிரகதி பல்நோக்கு மருத்துவமனையில் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம்
புதிய மையத்தை தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்
கோவை சித்தாபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரகதி பல்நோக்கு மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்
களை கொண்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது..
விபத்து மற்றும் அவசர சிகிச்சை,தலைக்காயம்,நரம்பியல்,பொது மருத்துவம்,நீரிழிவு நோய்,வயிறு மற்றும் குடல் தொடர்பான நோய்கள்,
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை,
இருதவியல்,
நுரையூரல் தொடர்பான நோய்கள் என அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்க கூடிய தேர்ந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு பிரகதி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது..
இந்நிலையில் பிரகதி மருத்துவமனைக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் அதி நவீன தொழில் நுட்பமான ரோபோட்டிக் சிகிச்சை மையம் பிரகதி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.
இதற்கான துவக்க விழா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு புதிய ரோபோட்டிக் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்..
இது குறித்து பிரகதி மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ஏற்கனவே பல்துறை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டு வந்த பிரகதி மருத்துவமனையில் தற்போது, புதியதாக துவங்கப்பட்டுள்ள ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம் வாயிலாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை வழங்குவதோடு,சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என அவர் தெரிவித்தார்..
விழாவில் மருத்துவர் வேலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்…

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்