திண்டுக்கல் நவம்பர் 26
சிவகாசியில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரியில் பட்டாசுகளை ஏற்றி கொண்டு மும்பையை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை ஈரோடு அருகே உள்ள சூரம்பட்டி வலசை சேர்ந்த சந்திரசேகரன் வயது 53 என்பவர் ஓட்டி சென்றார். லாரியை வேடசந்தூர் அருகே உள்ள அய்யர் மடத்தில் டீ சாப்பிடுவதற்காக சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் சென்று விட்டார். அப்பொழுது திண்டுக்கல் கரூர் ரோட்டில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆதர்ஷ்(25) என்பவர் ஓட்டி வந்த காற்றாலை எஸ்கார்ட் வாகனம் நின்று இருந்த லாரியின் பின்பக்கமாக மோதி உள்ளே நுழைந்தது. இதில் எஸ்கார்ட் வாகனத்தின் ஒரு பகுதி அப்பளமாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயம் இன்றி தப்பினார். தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் கன்னிமுத்து, பழனிசெல்வம், தலைமை காவலர் ராஜேந்திரன் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிய வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். திண்டுக்கல் கரூர் செல்லும் சாலைகள் இவ்வாறான விபத்துக்கள் அதிக வண்ணம் ஏற்பட்டு வருகின்றன போக்குவரத்து அதிகம் உண்டான சாலையில் சுங்கச்சாவடியினர் அதற்கு உண்டான ஒளிரும் விளக்குகளையும் விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து விபத்து நடக்கா வண்ணம் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்