அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு, பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் காவிக் கொடி ஏற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடும் விதமாகவும், இந்தியா என்றென்றும் இந்துக்களின் சாம்ராஜ்யமாகத் திகழ வேண்டும் என வேண்டியும் படைவீடு அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், நீண்ட காலப் போராட்டங்களுக்குப் பிறகு பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அண்மையில் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் அங்கு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவும், அங்கு ஏற்றப்பட்ட காவிக் கொடியும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனையைத் தமிழகத்தில் கொண்டாடும் வகையிலும், பாரதப் பிரதமரின் முயற்சிகளைப் போற்றும் வகையிலும், திருவண்ணாமலை மாவட்டம், படைவீடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருத்தலத்தில் இந்து தர்ம பாதுகாப்பு பேரவை சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்து தர்ம பாதுகாப்பு பேரவையைச் சேர்ந்த மருதமலையார் (எ) மருதமலை ஏ.கே.ஜி. சித்தார்த் அபிமன்யு அவர்கள் இந்த வழிபாட்டினை முன்னின்று நடத்தினார்.
இந்த வழிபாட்டின் போது சித்தார்த் அபிமன்யு அவர்கள், “அயோத்தியில் ராமர் கோயில் அமைந்தது போல, இந்தியா முழுவதுமே இந்து தர்மம் செழித்தோங்க வேண்டும். இந்தியா என்றென்றும் இந்துக்களின் சாம்ராஜ்யமாக, வலிமையான தேசமாக நிலைத்திருக்க வேண்டும்” என்று இறைவனிடம் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
இந்நிகழ்வில் இந்து தர்ம பாதுகாப்பு பேரவையின் நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ரேணுகாம்பாள் அம்மனை தரிசனம் செய்தனர்.

More Stories
கிருத்திகை சேவைஅருள்மிகு வித்துகிரிவேலவன் திருக்கோவில்
வந்தவாசி கோவில்களில் பொங்கல் பண்டிகை சிறப்பு பூஜைகள்..!
கௌமார மடாலய சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை விழா&முப்பெரும் விழா