June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தஞ்சையில் திமுகவுடன் மதசார்பற்ற கட்சிகளின் விவசாயிகள் ஒன்றிய அரசிற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்..நவ 25

குருவைப் பட்டத்தில் நெல் அதிக விளைச்சல் இருந்தும் நல்ல கொள்முதல் இருந்தும் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த கோரிக்கை விடுத்து மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் தஞ்சையில் திமுகவும் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி ஆணை வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசிற்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.

தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது இதனை அடுத்து

நெலின் ஈரப்பத அளவை அதிகரிக்காமலும் நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து.

தஞ்சையில் மத சார்பற்ற கூட்டணி சார்பில்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது .

இதன் அடிப்படையில். தஞ்சை ரயிலடி அருகே தலைமை தபால் நிலையம் முன்பு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு.

திமுக மத்திய மாவட்ட செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர். துரை சந்திரசேகர் வரவேற்புரை ஆற்றினார்

மாநில விவசாயிகள் அணி செயலாளர் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான
ஏ கே எஸ் விஜயன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

மாநில விவசாயிகள் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார் .

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பழகன்.

சட்டமன்ற உறுப்பினர் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல்

கழக உயர்நிலை திட்ட குழு உறுப்பினர்
பழனிமாணிக்கம்.

மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம்.

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா.

சட்டமன்ற உறுப்பினர்கள்
டி கே ஜி நீலமேகம் ஜவஹிருல்லா,
அண்ணாதுரை அசோக்குமார்

மேயர்
சன்ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் பூபதி கழகச் சட்ட திட்ட குழு உறுப்பினர் இறைவன்.

தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம்
மதிமுக துணை பொதுச்செயலாளர் முருகன்

இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி

காங்கிரஸ் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன்

காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன்

தி க தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங்
மதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன்

சிபிஐ தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன்.

விசிக மத்திய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர்.

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற கட்சிகளைச் சேர்ந்த நிறைய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்ட செய்தியாளர்
மா.மதிவதனன்