புதுச்சேரி, ஜூன் 14: தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் (FNPO) சார்பில் புதுச்சேரி கோட்டத்தின் 35-வது ஈராண்டு கோட்ட மாநாடு காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஜெயராமில் இன்று நடைபெற்றது.
காலை 9.30 மணி அளவில் சங்கக் கொடி ஏற்றப்பட்டு மாநாடு துவங்கப்பட்டது. இதில் புதுச்சேரி கோட்டத்தைச் சேர்ந்த அஞ்சல் ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மாநாட்டின் பொருள் ஆய்வுக் கூட்டத்திற்கு NUGDS தமிழ் மாநிலத் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார்.
மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினரும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான ரவிக்குமார் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
சிறப்பு விருந்தினர்களாக எம். சுரேஷ்குமார், வழக்கறிஞர் வீரபத்திரன் மற்றும் வழக்கறிஞர் மலர்மன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சதீஷ்குமார், தமிழ் மாநில செயலாளர், FNPO NAPE Gr.C, சுகுமாரன், தமிழ் மாநில செயலாளர், FNPO NUPE PM & MTS Gr.C மற்றும் சரவணன் வேல், தமிழ் மாநில செயலாளர், FNPO NUGDS ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பிரதீப் குமார், ரவீந்திர பாபு, மோகன்ராஜ், சரவணன், கார்த்திகேயன், கோதண்டராமன், லோகநாதன் மற்றும் செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சங்கத்தின் வளர்ச்சிக்காக வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ரூ.1 லட்சம் வளர்ச்சி நிதியாக வழங்கினார். இதற்கு சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
இறுதியாக சோமசுந்தரம், உதவி செயலாளர் நன்றி உரை வழங்கினார்.

More Stories
குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு கூட்டம்!!
உதவித்தொகை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
“விக்சித் பாரத் மற்றும் சிறந்த புதுச்சேரி உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் இளைஞர் தலைவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.