June 15, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,15/06/2026.

சேலத்தில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மாறுது – ட்ராபிக் நெரிசலுக்கு பெரிய பாலம் வருது – 4 ரூட்டும் கிளியர் ஆகுது.

சேலத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலம் ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் நான்கு வழித்தடங்களிலும் வாகன ஓட்டிகள் எளிதாக பயணம் செய்ய முடியும் என்கின்றனர்.

சீலநாயக்கன்பட்டி பைபாஸ் எவ்வளவு முக்கியம் என்பது சேலம் பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். இது நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை 44ல் அமைந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் பெங்களூரு செல்வதற்கு முதன்மையான வழித்தடமாக திகழ்கிறது. மேலும் நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி என தென் மாவட்டங்கள் செல்வதற்கும் உதவிகரமாக இருந்து வருகிறது. சேலம் – உளுந்தூர்பேட்டை – சென்னை கனெக்‌ஷன்இந்த பைபாஸ் சாலையானது NH 79 எனப்படும் சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை உடன் இணைக்கிறது. இதன்மூலம் சென்னைக்கு விரைவாக செல்ல முடியும். அதுமட்டுமின்றி சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லவும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் முக்கியத்துவம் பெறுகிறது. சேலம் மாநகருக்குள் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர், பிற நகரங்களுக்கு தினசரி செல்லும் சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், தனி நபர் வாகனங்கள் போன்றவற்றால் இந்த பைபாஸ் சாலை கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகிறது.

சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் மேம்பாலம் .

இதற்கு தீர்வு காணும் வகையில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் மேம்பாலம் ஒன்று கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இருபுறமும் சர்வீஸ் சாலைகள், பேருந்து நிறுத்துவதற்கான இடங்கள், நடைமேம்பாலம் ஆகியவையும் இடம்பெறவுள்ளன. இதுதொடர்பான வடிவமைப்பு வேலைகளை Assystem இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றிருக்கிறது. புதிய மேம்பாலத்தின் மூலம் நீண்ட தூரம் செல்லும் வாகனங்கள் விரைவாக சென்றுவிடலாம்.