June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் வழிபாடு:-தேனி. ஜூன்.தேனி- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சீலையம்பட்டியில் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில் ஞான சக்தி பீடத்தில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வழிபாடு செய்தார்.அவருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு,கோவில் அர்ச்சகர் மற்றும் கோவில் நிர்வாகத்தினரால் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.எம்.எல்.ஏ.க்கள் ஜெகநாத்மிஸ்ரா,சபரி ஐங்கரன்,முன்னாள் எம்.பி. பார்த்திபன் ஆகியோருக்கும் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.அப்பொழுது, காலகண்டி, பைரவ மகரிஷி என்று பக்தர்களால் போற்றப்படும் மஹா பிரத்யங்கிரா தேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.ஸ்ரீ சாந்தி ஞாநஸரஸ்வதீ மாதா குரு,கோவில் தர்மகர்த்தா ராஜேந்திரன்-நிர்மலா குடும்பத்தினர்,இரா.யுகேஷ்குமார் உட்பட சீலையம்பட்டி ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி திருக்கோயில் ஞான சக்தி பீடத்தினர்,முக்கிய பிரமுகர்கள்,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.