June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறையில்

சத்துணவு பணியாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர்

மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் மாநிலத் தலைவர் உன் ஜெயக்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் அவர்களை சந்தித்து புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 42 ஆண்டுகளாக தொகுப்பூதியம்சிறப்பு கால முறை ஊதியத்தின் மூலம் பணிபுரிகின்ற சத்துணவு பணியாளர்களை கால முறை ஊதியத்தில் பணிபுரிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் வழங்கினர்

சத்துணவு அமைப்பாளர்கள் மத்தியில் பேசிய எம்எல்ஏ ரா கதிரவன் :

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி தளபதி ஆட்சி எனவே சத்துணவு பணியாளர்கள் தாங்கள் பணி செய்யும் பள்ளிகளில் சுகாதாரமான சுத்தமான உணவுகளை தயார் செய்ய வேண்டும் சிறு குழந்தைகள் இந்த உணவுகளை உட்கொண்டு வருகின்றனர் எனவே அதிக கவனம் செலுத்தி உணவுகளை தயார் செய்ய வேண்டும்

இதேபோல் தினம்தோறும் மாணவ மாணவிகளுக்கு காலை மதியம் சத்தான உணவு வழங்க நீங்கள் அனைவரும் முன்வர வேண்டும் மேலும் பேசுகையில் கடந்த ஆட்சியில் சத்துணவு பணியாளர்கள் இருந்தது போல் இல்லாமல் புதிய அரசு தளபதி அரசிற்கு எந்தவித கெட்ட பேரும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் துறை அமைச்சரிடமும் சட்டமன்றத்திலும் உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன் உங்களின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தர பாடுபடுவேன் எந்தவித கலக்கமும் இல்லாமல் பயமும் இல்லாமல் நீங்கள் பணியாற்றுங்கள் என்று
சத்துணவு பணியாளர்கள் மத்தியில் பேசினார்

இதில் மணப்பாறை மருங்காபுரி வையம்பட்டி உள்ளிட்ட ஒன்றிய நகரங்களில் உள்ளசத்துணவு பணியாளர்கள் மற்றும் த வெக திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசு மாவட்ட இணை செயலாளர் ஆர் ஏ தினேஷ் மணப்பாறை நகர கழக செயலாளர் திருப்பதி அழகர் மற்றும் நிர்வாகிகள் தொப்பம்பட்டி பாரதி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜில்லா குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்