விழுப்புரம் ஜூன் 07
விழுப்புரம்
இ எஸ் கல்வியல் கல்லூரியில்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு விழா நடைபெற்றது.
இவ்விழா E.S கல்வி குழுமத்தின் தலைவர்
S.செல்வமணி தலைமையில், E.S கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் தே.செந்தில்முருகன் வரவேற்புரையாற்றினார், சிறப்பு விருத்தினராக விழுப்புரம், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேதியியல் துறை தலைவர் ஒய்வு பெற்ற முனைவர் பூபதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார். மரங்களை நட்டு வளர்ப்பதன் முக்கியத்துவம், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, மாணவர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் சிறப்பாக அமைந்தது. அனைவரும் இயற்கையைப் பாதுகாத்து பசுமையான எதிர்காலத்தை உருவாக்க உறுதியேற்றனர்.
இதில் இ.எஸ் கல்வியியல் கல்லூரி துணை பேராசிரியர்களும் மற்றும் பயிற்சி மாணவ ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்